அருள் தரும் அன்னை வடபத்திரகாளி
அம்பாள் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள் விரைவாக நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன இந்த வேளையில் இன்றைய தினம் (10-05-2019) சில செய்தி
ஊடகங்களில் பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்தில் வெடிபொருட்கள் மற்றும் பல
மீட்கப்பட்டதாக செய்தி ஒன்று வந்திருந்தது. இச்செய்தி பார்த்த அடியார்கள்
மிகவும் அதுவும் விசேடமாக வெளிநாடுகளில் இருக்கும் அடியார்கள்
வேதனையடைந்தார்கள்.
உண்மையில் ஆலய வளாகத்தில் எதுவிதமான தேவையற்ற பொருட்களும் மீட்கப்படவில்லை அப்படி எதுவும் அங்கு இருக்கவுமில்லை.
ஆலய முன்புறமாகவுள்ள பத்தானை வீதியின் ஓரத்தில்தான் மேற்படி பொருட்கள்
மீட்கப்பட்டன. இதை தவறாக ஆலய வளாகம் என்று செய்தி
வெளியிடப்பட்டுள்ளது என்பதை அடிவயார்களின் கவனத்திற்கு தருகின்றோம்.